மாதம்பையில் வியாபாரத்திற்காக மீன் ஏற்றி சென்ற மோட்டார் சைக்கில் விபத்து சி
மாதம்பையில் வியாபாரத்திற்காக மீன் ஏற்றி சென்ற மோட்டார் சைக்கில் விபத்து
சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் மாதம்பை பம்பல பிரதேசத்தில் வியாபாரத்திற்காக மீன் ஏற்றிக்கொண்டு சென்ற மோட்டார் சைக்கில் ஒன்றின்
மீது ,பின்புறமாகச் சென்ற
ஆடம்பர சொகுசு பேரூந்து மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடந்ததாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து (20) ஞாயிறு காலை இடம்பெற்றுள்ளது.இதில் மோட்டார் சைக்கிளில் மீன்களை வியாபாரத்திற்காக ஏற்றிக் கொண்டு பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உடப்பு நிருபர்-க.மகாதேவன்
