சமூக மட்டத்தில் பிணக்குகள் ஏற்படும் போது இலகுவாக தீர்த்தல் செயலமர்வு..!
சமூக மட்டத்தில் பிணக்குகள் ஏற்படும் போது இலகுவாக தீர்த்தல் செயலமர்வு..!
சமூக மட்டத்தில் ஏற்படும் பிணக்குகளை தீர்த்துக் கொள்வது தொடர்பாகவும் மத்தியஸ்த சபைகளூடாக தீர்க்கப்பட வேண்டிய பிணக்குகளை தீர்ப்பது தொடர்பாக மரைக்காயர் சபையின் பங்களிப்பை பெற்றுக் கொள்வது தொடர்பாகவும், பிணக்குகளை தீர்த்துக் கொள்ள பயன்படுத்தும் பல்வேறு பொறிமுறைகள் தொடர்பாகவும் மரைக்காயர் சபை உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் பயிற்சிச் செயலமர்வு நேற்று (2026.01.11) ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் மரைக்காயர் சங்கத் தலைவர் ஏ.பீ.எம்.ஏ.காதர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினை சிறப்பாக மரைக்காயர் சங்கத்தின் செயலாளரும் ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமாகிய என். சம்சுதீன் நெறிப்படுத்தினார்.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை மத்தியஸ்த சபையின் தவிசாளர் ஐ.எல்.ஹாஸிம் சாலியின் அழைப்பை ஏற்று வருகை தந்திருந்த நீதி அமைச்சின் மத்தியஸ்த சபைகளுக்கான பயிற்றுவிப்பாளர் எம்.ஐ.முஹம்மட் ஆசாத் வளவாளராக கலந்து கொண்டு பயிற்சியினை மிகவும் சிறப்பாக மரைக்காயர் சபைக்கு வழங்கினார்
இதன்போது சமூகமக்ட்டத்தில் ஏற்படுகின்ற பல்வேறு பிணக்குகளை தீர்ப்பது தொடர்பாகவும் இதற்கு மத்திய சபையின் ஊடாக எவ்வாறு இந்த பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும் என்பது தொடர்பாகவும் மத்திய சபைகள் கையாளுகின்ற பிணக்குகளை தீர்ப்பிற்கு மரைக்காயர் சங்கத்தின் ஒருங்கிணைந்த அணுகுமுறைமூலம் ( Multi sectoral Approach) இணக்கத்தீர்வை கட்டுவதற்கும் தீர்வை நிலைபேறாக நடைமுறைப்படுத்துவதற்கும் குடுமங்களிடையே புரிந்துணர்வையும் சக வாழ்வையும் மேம்படுத்துவதனூடாக மத்தியஸ்தத்தினுடைய நோக்கம், நோக்கக் கூற்று அடைவதற்கு மத்தியஸ்த சபையும் மரைக்காயர் சபையும் இணைந்து செயற்படுவது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
எதிர்காலத்தில் மத்தியஸ்த பயிற்றுவிப்பாளர் ஊடாக தொடர்பாடல் திறன்கள் மற்றும் மத்தியஸ்த திறன்களை வளர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது. குடும்பப் பிணக்குகளை தீர்ப்பதில் முதற்பங்கு வகிக்கும் மரைக்காயர் ளின் வாண்மைத்திறனை மேம்படுத்தும் விதத்தில் இச்செயலமர்வு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மரைக்காயர் சபையின் உதவிகளை மத்தியஸ்த சபைக்கு பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இந்த செயற்பாடு இந்த செயல் திட்டமானது மிகவும் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் சிரேஷ்ட சட்டத்தரணி சர்ஜுன் ஜமால்டீன் கலந்து கொண்டதோடு அவரால் எழுதப்பட்ட அம்பாறை மாவட்ட காணிப் பிரச்சினைகள் தொடர்பான நூலும் வழங்கி வைக்கப்பட்டது.
எதிர்காலத்தில் இந் நிகழ்வுகள் நீதி அமைச்சின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் வழிகாட்டலுடன் நடைமுறைப் படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்செயலமர்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் உதவி கல்விப் பணிப்பாளர் அல்-ஹாஜ்
ஏ.எல்.பாயிஸ்(மரைக்கார்) அதிபர்
M.ஜசாஹிர் (மரைக்கார்) உட்பட மரைக்காயர் சபையினர் கலந்து கொண்டனர்.
கே.ஏ.ஹமீட்,
