மாமுனை சந்தியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்து..!
மாமுனை சந்தியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்து..!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மாமுனை சந்தி பகுதியில் இன்றைய தினம் 4:30 மணியளவில் வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து சற்றுமுன் விபத்திற்குள்ளாகியுள்ளது
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்
பருத்தித்துறையில்இருந்து மருதங்கேணி நோக்கி பயணித்த குறித்த இரு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மாமுனை சந்தி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது
விபத்தின் போது வாகனத்தில் பயணித்தவர்களுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்கு சென்றிருந்த மருதங்கேணி போக்குவரத்து பொலிசார் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
குறித்த விபத்து நடந்த பகுதியில் உரிய வீதி குறியீடுகள் இல்லை என்பதாலையே இந்த பகுதியில் அதிகளவான விபத்துக்கள் இடம்பெற்றுவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்
