கடல் பரப்பில் தாக்கப்பட்ட கடல் தொழிலாளி மற்றும் மீன் பிடி உபகரணங்கள்.....!
கடல் பரப்பில் தாக்கப்பட்ட கடல் தொழிலாளி மற்றும் மீன் பிடி உபகரணங்கள்.....!
யாழ் வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் நேற்றைய தினம் 05/12/2025 அன்று இனம் தெரியாத நபர்களால் தாக்குதல் நடவெடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது
தாளையடியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தனது அன்றாட கடல் தொழில் நடவெடிக்கையில் ஈடுபட்டு கொண்ட போது இனந்தெரியாத கும்பல் ஒன்று பலத்த தாக்குதலை நடத்தியுள்ளது
இதன் போது கடல் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் படகு மற்றும் இயந்திரங்கள் தாக்கப்பட்டதோடு குறித்த நபரும் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார்
குறித்த வன்முறை கும்பல் போதைப்பொருள் உள்ளதா உனக்கும் போதை மாஃபியா க்கும் என்ன தொடர்பு என வன்மையான குரலுடன் கேட்டு தாக்குதலை நடத்தியுள்ளது
இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

