Breaking News

மிகவும் சிறப்பாக இடம்பெற்ற பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் கலாச்சார நிகழ்வும் சான்றிதழ் வழங்கும் வைபவமும்.....!


மிகவும் சிறப்பாக இடம்பெற்ற பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் கலாச்சார நிகழ்வும் சான்றிதழ் வழங்கும் வைபவமும்.....!




பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் யாழ் வடமராட்சி கிழக்கு பிரதேச பிரிவுக்கு உட்பட்ட பெண்களுக்கான கலாச்சார நிகழ்வும் சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்றைய தினம்(17) வடமராட்சி கிழக்கு கலாச்சார மண்டபத்தில் காலை 10:30 மணியளவில் ஆரம்பமானது 


இவ் நிகழ்வில் ஆரம்பத்தில் விருந்தினர்கள் மலர்க்கொத்து கொடுத்து அழைக்கப்பட்டு விருந்தினர்களால் மங்கள விளக்கேற்றி வரவேற்பு நடனத்துடன் கலாச்சார நிகழ்வுகளான பரத நாட்டியம் ,கவிதை ,பாடல் மற்றும் கோலாட்டம் மற்றும் நடனம் மற்றும் சிலம்பாட்டம் மற்றும் சுருள் வாள் சுற்றுதல் நாடகம் போன்ற நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது 


பின்னர் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது இவ் சான்றிதழ்கள் பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டு பெண்கள் சம்மந்தமான அடிப்படை சட்ட உரிமைகள் தொடர்பாக பயிற்சியூட்டப்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்டது அதனை தொடர்ந்து விருந்தினர்களுக்கான நினைவுச்சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டது 





நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகர் திருமதி சிவலிங்கம் உஷா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ரோகிணி அவர்களும் மற்றும் பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் இணைப்பாளர் வாசுகி வல்லிபுரம் அவர்களும் மற்றும் மருதங்கேணி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பொருளாதார உத்தியோகத்தர் மற்றும் பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள் மற்றும் பெண்கள் சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்