பலத்த போட்டியின் மத்தியில் பாரதி கிண்ணத்தை தமதாக்கி கொண்டது கட்டைக்காடு சென் மேரிஸ் அணி.....!
பலத்த போட்டியின் மத்தியில் பாரதி கிண்ணத்தை தமதாக்கி கொண்டது கட்டைக்காடு சென் மேரிஸ் அணி.....!
வடமராட்சி கிழக்கு உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் உடுத்துறை பாரதி விளையாட்டு கழகத்தினர் வருடம் தோறும் நடத்தும் 2025 ம் ஆண்டுக்கான உதைபந்தாட்ட இறுதிப்போட்டி இன்றய தினம் உடுத்துறை பாரதி விளையாட்டு மைதானத்தில் பாரதி விளையாட்டுக்கழக தலைவர் இ.சிந்துயன் தலைமையில் மாலை 3 30 மணியளவில் ஆரம்பமானது
இவ் விளையாட்டு விழாவில் ஆரம்பத்தில் விருந்தினர்கள் அழைக்கப்பட்டு பின் விருந்தினர்களால் மங்கள விளக்கேற்றி வைத்து பின் தேசிய கீதம் ஒலிக்கபட்டது
அதனை தொடர்ந்து உயிர் நீத்த உறவுகளுக்காக சிறிது நேரம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது
அதனை தொடர்ந்து இறுதி உதைபந்தாட்ட போட்டியில் கட்டைக்காடு சென் மேரிஸ் அணியினரை எதிர்த்து வெற்றிலைக்கேணி சென் செபாஸ்டியன் அணி மோதியது மிக விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் இறுதி வரை இரு அணிகளும் எந்த வித கோலங்களும் போடாத நிலையில் தண்ட உதை தீர்மானிக்க பட்டது தண்ட உதையில்4 :3எனும் கோல் கணக்கில் கட்டைக்காடு சென் மேரிஸ் அணி வெற்றி பெற்று இந்த ஆண்டுக்கான பாரதி கிண்ணத்தை தமதாக்கி கொண்டது
இவ் இறுதி போட்டியின் பிரதம விருந்தினராக பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ் அவர்களும் கௌரவ விருந்தினராக மருதங்கேணி பதில் பொலிஸ் அதிகாரி அத்துக்கல அவர்களும் மற்றும் வடமராட்சி கிழக்கு பிரதேசம் முழுவதும் இருந்து இளைஞர்கள் பெண்கள் சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
