Breaking News

தியாகி திலீபன் அவர்களது இறுதிநாள் நினைவேந்தல்..!

தியாகி திலீபன் அவர்களது இறுதிநாள் நினைவேந்தல்..!

  


தியாகி திலீபன் அவர்களது 38 வது ஆண்டு நினைவேந்தல் இறுதிநாள் நிகழ்வுகள் பருத்தித்துறை மக்களால் பருத்தித்துறை தியாக தீபன் திலீபன் அவர்களது நினைவாலயத்தில் காலை 8 மணிமுதல் அடையாள உண்ணாவிரதத்துடன் வடமராட்சி மக்களால் நினைவேந்தப்பட்டது.


மவீரர்களான புட்சித்தமிழ், அவர்களது பெற்றோர் பரஞ்ஜோதி தவமணி அவர்களால் பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. தியாகி திலீபன் அவர்களது திருவுருவ படத்திற்கு மலர் மாலை



 அணிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கலந்துகொண்டவர்களால் மலர் அஞ்சலிகள் செலுத்தப்பட்டது. அவர்களும் 


இதில் பருத்தித்துறை மௌலவி, இந்து சமய குரு, அரசசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டு தியாகி திலீபன் அவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.