கட்டாக்காலி மாடுகளின் இருப்பிடமாக மாறிய வடமராட்சி கிழக்கு பொதுமைதானம்
கட்டாக்காலி மாடுகளின் இருப்பிடமாக மாறிய வடமராட்சி கிழக்கு பொதுமைதானம்
வடமராட்சி கிழக்கு பொதுமைதானம் கட்டாக்காலி மாடுகளின் வாழ்விடமாக மாறியுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்
உரிய பராமரிப்பு இன்றியும் ஒரு பக்க வேலியற்றுக் காணப்படும் வடமராட்சி கிழக்கு பொதுமைதானத்தில் நாளாந்தம் நூற்றுக்கணக்கான மாடுகள் படுத்துறங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது
இதனால் பொதுமைதானத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சிகளை மேற்கொள்ள முடியாத நிலை கடந்த பல வருடங்களாக காணப்படுகின்றபோதும்,இது குறித்து அருகில் அமைந்துள்ள பிரதேச செயலம் மற்றும் பிரதேச சபையினருக்கு தெரியப்படுத்தியவேளையும் எந்தவித. நடவடிக்கையும் எடுக்கவில்லையென மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்
வடமராட்சி வீரர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உரிய அதிகாரிகள் உடனடியாக பொதுமைதானத்தின் வேலிகளை சரி செய்து கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து பொதுமைதானத்தின் தரத்தை பேணுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்கின்றனர்