Breaking News

மருதங்கேணி – மணற்காடு றோ.க.த.க. பாடசாலைக்கு கணனி மற்றும் உபகரணங்கள் கையளிப்பு

 மருதங்கேணி – மணற்காடு றோ.க.த.க. பாடசாலைக்கு கணனி மற்றும் உபகரணங்கள் கையளிப்பு



மருதங்கேணி – மணற்காடு றோ.க.த.க. பாடசாலைக்கு, 2026ஆம் ஆண்டிற்கான எனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் கணனி மற்றும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்களை இன்று கையளித்தேன்.


மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளில் தகவல் தொழில்நுட்பப் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கும், அவர்களின் டிஜிட்டல் கற்றல் வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும் இவ்வுபகரணங்கள் பயனுள்ளதாக அமையும் என நம்புகின்றேன்.


பாடசாலைகளின் கல்வித் தேவைகளை நேரில் கேட்டறிந்து, இயன்றவரை தேவையான வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்போம்.