சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பம்!
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பம்!
=============
நாடாளுமன்றச் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்னவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் இன்று (08) நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றில் கையொப்பமிட்டுள்ளன.
நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் பணிமனையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இந்த கையொப்பமிடும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு பிரேரணையில் கையொப்பமிட்டனர்.
