Breaking News

திலீபன் சிலை அகற்திய விவகாரம். அனுர அரசின் பேரினவாதத்தின் வெளிப்பாடு.. தவிசாளர் நிரோஷ்

 திலீபன் சிலை அகற்திய விவகாரம். 

அனுர அரசின் பேரினவாதத்தின் வெளிப்பாடு.. தவிசாளர் நிரோஷ்



அகிம்சை வழியில் போராடி தனது உயிரை தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் சிலையை சிறீலங்கா பொலிசார் உடைத்து எடுத்துச் சென்றமை அனுர அரசின் பௌத்த சிங்கள மேலாதிக்கத்தின் வெளிப்பாடாகும் என வலி கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். 


நேற்று திங்கட்கிழமை நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் திலீபனின் உருவச்சிலையை அகற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். 


அவர் மேலும் தெரிவிக்கையில் அனுர தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வரதுக்கு முன்னர் கூறிய வாக்குறுதிகள் அனைத்தையும் மீறி அராஜகப் போக்கில் செய்யப்பட்டு வருகிறது. 


நினைவேந்தல் உரிமையை பாதுகாப்போம் மாவீரர்களுக்கு சிலை வைப்போம் என கூறியவர்கள் ஒரு அகிம்சாவாதியின் திருவுருவாச்சிலையை பொலிசாரை வைத்து உடைத்து அகற்றி இருக்கின்றனர். 


உள்ளூர் ஆட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தில் காட்சிப்படுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் தெளிவாக கூறப்பட்ட போதும் உள்ளூராட்சி அதிகாரங்களை மீறி சிறீலங்கா பொலிசார் திலீபன் அண்ணாவின் திரு உருவச்சிலையை அகற்றி இருக்கின்றனர். 


திலீபன் அண்ணாவின் திரு உருவச்சிலையை அகற்றியமை அனுர அரசின் பொலிசார் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்களை பௌத்த சிங்கள பேரினவாதத்தின் பிடியில் எடுத்துள்ளார்கள் . 


பொலிசாரின் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதோடு திலீபன் அண்ணாவின் திரு உருவச்சிலையை மீண்டும் அதே இடத்தில் வைப்பதற்கு அனுர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.